மேலும் செய்திகள்
தேசிய அறிவியல் தின விழா: மாணவர்களுக்கு போட்டி
26-Feb-2025
அவிநாசி : அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு வேதியியல் துறை சார்பில் துறை மாணவர்களின் படைப்புகள் கண்காட்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் நளதம் உள்ளிட்டோர் மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர். கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் ஹேமலதா, கீதா ஆகியோர் மாணவர்களின் படைப்புகளை தேர்வு செய்தனர்.பரிசு பெற்றவர்களுக்கும், பங்கேற்ற மாணவர் களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வேதியியல் துறைத் தலைவர் ஷகிலாபானு உள்ளிட்டோர் கண்காட்சியை ஒருங்கிணைத்தனர்.
26-Feb-2025