உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக., 18ல் மணி மண்டபம் திறப்பு விவசாயிகள் சங்கம் ஆலோசனை

ஆக., 18ல் மணி மண்டபம் திறப்பு விவசாயிகள் சங்கம் ஆலோசனை

பல்லடம்:முன்னாள் விவசாய சங்க தலைவரின் மணிமண்டபத் திறப்பு விழா குறித்து, பல்லடம் அருகே, விவசாய சங்க நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்.எஸ். பழனிசாமியின், 82வது பிறந்தநாள் விழா மற்றும் மணிமண்டபம் திறப்பு விழா ஆகியவை, ஆக., 18 அன்று பல்லடம் அடுத்த நாதகவுண்டம்பாளையம் கிராமத்தில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, விவசாய சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. செயல் தலைவர் வெற்றி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் வரவேற்றார். தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளை விழாவுக்கு பங்கேற்க செய்ய வேண்டும். விழாவில் பங்கேற்ற சிறப்பிக்க உள்ள முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தல் மற்றும் பாகுபாடு கருதாமல் அனைத்துக் கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். விழாவில் பங்கேற்கும் அனைத்து விவசாயிகள் பொதுமக்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதுடன், காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு அளித்து விழாவில் பங்கேற்க வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவது என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ