உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயிகள் முற்றுகையால் பரபரப்பு வேளாண் நிலத்தில் அகற்றுங்கள்... சாலையோரம் குழாய் பதியுங்கள்

விவசாயிகள் முற்றுகையால் பரபரப்பு வேளாண் நிலத்தில் அகற்றுங்கள்... சாலையோரம் குழாய் பதியுங்கள்

திருப்பூர்;முப்பது ஆண்டுகளுக்கு முன் பதித்த குழாய்களையும், சாலையோரமாக மாற்றிப் பாதிக்க வேண்டுமென, குறைகேட்பு கூட்டத்தில், விவசாயிகள் முற்றுகையிட்டதால், கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில், கடந்த 30 ஆண்டுகள் முன், பெட்ரோல் எடுத்துச்செல்லும் குழாய் பாதிக்கப்பட்டது. இருகூரில் இருந்து, முத்துார் வரை, 70 கி.மீ., துாரத்துக்கு, விவசாய நிலங்கள் வழியாக பதிக்கப்பட்டுள்ளன. தற்போது, மீண்டும் கரூர் வரை, 270 கி.மீ., துாரத்துக்கு குழாய் பாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.தமிழக அரசின் கொள்கை முடிவின்படி, விவசாய நிலங்களில் குழாய் பதிக்க அனுமதியில்லை; நெடுஞ்சாலையோரம் குழாய்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இத்திட்டத்திலும், குழாய் பதிக்கும் பணியை, நெடுஞ்சாலை ரோடுகள் மார்க்கமாக மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.முன்னுாறுக்கும் அதிகமான விவசாயிகள், தனித்தனி மனுக்களுடன், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் நேற்று முற்றுகையிட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் உறுதி அளித்துள்ளார். புதிய திட்டத்தில் ரோட்டோரமாக குழாய் பதிப்பது போல், ஏற்கனவே விவசாய நிலத்தில் பதித்த குழாய்களையும் மாற்றி, ரோட்டோரமாக பதிக்க வேண்டுமென, விவசாயிகள் மனுக்களை கொடுத்தனர்.-----விவசாய நிலத்தில் பதித்த பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய்களை, சாலையோரம் பதிக்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்புக் கூட்டத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.

கரவொலி எழுப்பிய விவசாயிகள்

கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில்,''அரசு கொள்கை முடிவுப்படி, ரோட்டோரமாகத்தான் குழாய்கள் பதிக்கப்படும்; மாவட்ட நிர்வாகத்தின் முடிவும் அதுதான். விவசாயிகள் கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். முற்றுகையிட்ட விவசாயிகள், கரவொலி எழுப்பி நன்றி தெரிவித்தபடி கலைந்து சென்றனர். *


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை