உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 26ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

26ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், வரும் 26ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது. முதலில் விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்படும். அதன்பின் விவசாய சங்கங்களில் ஒருசங்கத்துக்கு ஒருவர் தங்கள் கோரிக்கைகளை தொகுத்து பேசலாம்.அனைத்து அரசு துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.குறைகேட்பு கூட்டத்தின் ஒருபகுதியாக, வேளாண் உதவி மையம் மூலம், நுண்ணுயிர் பாசன அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். உரிய ஆவணங்களை கொண்டுவரும் விவசாயிகளுக்கு, நுண்ணுயிர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி