கால்வாய் அடைப்புதிருப்பூர், பாரப்பாளையம், திரு நகர் இரண்டாவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. எலி, கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது.- அக் ஷயா, பாரப்பாளையம். பணி மந்தம்அனுப்பர்பாளையம், திலகர் நகரில் கழிவுநீர் கால்வாய் கட்ட குழி தோண்டி மூன்று வாரமாகிறது. பணி நடக்காததால், பாதசாரிகள் நடந்து செல்ல வழியின்றி தடுமாறுகின்றனர்.- வரதராஜ், திலகர் நகர். விபத்து அபாயம்திருப்பூர், பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம் ஸ்டாப்பில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைக்கு வெள்ளை நிற பெயின்ட் பூசவில்லை. வேகமாக வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் தடுமாறுகின்றனர்.- ஆனந்த், மேட்டுப்பாளையம். தொட்டி ஆக்கிரமிப்புதிருப்பூர், 17வது வார்டு, எம்.எஸ்., நகர், அம்பேத்கர் காலனியில் தண்ணீர் தொட்டி ஆக்கிரமித்து பந்தல் கடை அமைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.- ரஞ்சித்குமார், அம்பேத்கர் காலனி. சிதையும் கால்வாய்மாநகராட்சி முதல் மண்டலம், வேலம்பாளையம் அடுத்த பி.டி.ஆர்., நகர் முதல் வீதியில் மரத்தின் வேர் விரிவடைந்து கால்வாய் சிதைந்து வருகிறது. கால்வாயை சீரமைக்க வேண்டும்.- மனோகரன், பி.டி.ஆர்., நகர். )வீணாகும் தண்ணீர்திருப்பூர், 15 வேலம்பாளையம், மகாலட்சுமி நகர், அண்ணா வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- பரிமளம், மகாலட்சுமி நகர். திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது.- பாலகிருஷ்ணன், கொங்கு மெயின் ரோடு. வால்வு பழுதுதிருப்பூர், பழைய இ.எஸ்.ஐ., மருத்துவமனை முன்புறம், விநாயகர் கோவில் அருகே, 24 மணி நேர குடிநீர் குழாய் கேட்வால்வு சேதமாகிறது. தண்ணீர் தொடர்ந்து வீணாகிறது.- பரந்தாமன், எம்.எஸ்., நகர். சாலை சேதம்திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, முதல் ரயில்வே கேட், வெங்கடாசலபதி மாநகராட்சி துவக்கப்பள்ளி முன்புறம் சாலை சேதமாகியுள்ளது. கற்கள் பெயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.- ராஜேந்திரன், ஊத்துக்குளி ரோடு. எப்படி செல்வது?திருப்பூர், கஜலட்சுமி தியேட்டர் சந்திப்பு சாலை தரைப்பாலம் சாலையை விட உயரமாக உள்ளது. வாகன டயர்கள் சேதமாகிறது. பலர் விழுந்து விடுகின்றனர். சீரமைக்க வேண்டும்.- பூபதி, வாலிபாளையம்.