உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அட்சய திருதியை நாள் தங்கம் விற்பனை அமோகம்

அட்சய திருதியை நாள் தங்கம் விற்பனை அமோகம்

திருப்பூர்:அட்சய திருதியை முன்னிட்டு திருப்பூர் பகுதியில் தங்க நகை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டினர்.திருப்பூர் பகுதியில் உள்ள பெரும்பாலான நகைக் கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் காலை முதல் இரவு வரை அதிகளவில் காணப்பட்டது. பல கடைகளிலும் கடந்த சிலநாட்களாக அட்சய திருதியை விற்பனைக்காக அட்வான்ஸ் பெற்று டோக்கன் வழங்கப்பட்டது. பலரும் தங்க நாணயங்கள், நகைகள் வாங்க ஆர்வமாக கடைகளில் திரண்டனர். இது தவிர நகைக்கடைகளில் சேமிப்பு திட்டத்திலும் பலரும் முதலீடு செய்தனர். ஏராளமான நகை கடைகளில் பச்சைப் பந்தல் அமைத்து, கடைகளின் முன்புறம் அலங்கரித்தும் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூடுதல் விற்பனை, 'கவுன்டர்' அமைத்தும் கடைகளில் விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை