உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறைகேட்பு கூட்டம் நாளை நடக்கிறது

குறைகேட்பு கூட்டம் நாளை நடக்கிறது

திருப்பூர்:தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால், பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நாளை நடைபெறும்.லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தது. இதனால், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை.தற்போது நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதையடுத்து நாளை (10ம் தேதி) காலை 10:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடைபெறும். இனி வழக்கம் போல் வாரம் தோறும் இது நடக்கும், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ