உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரை சதம் அடித்த தக்காளி

அரை சதம் அடித்த தக்காளி

திருப்பூர்;வரத்து குறைந்து வரும் நேரத்தில், விற்பனை சுறுசுறுப்படைந்துள்ளதால், மார்க்கெட்டில் முதல்தர தக்காளி விலை கிலோ, 50 ரூபாயை எட்டியுள்ளது.மே இறுதியில் பரவலாக பெய்த மழையால், திருப்பூர் உழவர் சந்தை, தென்னம்பாளையம் மார்க்கெட் இரண்டுக்குமான தக்காளி வரத்து ஒரே நேரத்தில் குறைந்தது. 20 முதல், 25 ரூபாயாக இருந்த தக்காளி, கிலோ, 40 ரூபாயாக விலை உயர்ந்தது. இருப்பினும், சிறிய ரகம், இரண்டாம் தர தக்காளி, 35 ரூபாய்க்கு விற்றது. ரோட்டோர கடைகளில், இரண்டரை கிலோ, 100 ரூபாய்க்கு தக்காளி விற்றது.தொடர்ச்சியாக திரு மணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு தக்காளி உள்ளிட்ட காய்கறி வாங்க பலரும் சந்தை, மார்க்கெட்டுக்கு படையெடுத்தனர். வரத்து குறைந்துள்ள இந்நேரத்தில், விற்பனையும் சுறுசுறுப்படைந்துள்ளதால், தக்காளிக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.நேற்று ஒரு கிலோ தக்காளி, 45 முதல், 50 ரூபாய் விற்றது. மளிகை கடை, சில்லறை விலையில் தக்காளி கிலோ, 55 ரூபாய் வரை விற்கிறது.வியாபாரிகள் கூறுகையில், 'முதல் தர மைசூரு (தாளவாடி) தக்காளி, 50 முதல், 55 ரூபாயக்கு விற்கப்படுகிறது. உள்ளூரில் தக்காளி வரத்து குறைந்து விட்டதால், கர்நாடகா, ஒட்டன்சத்திரத்தில் இருந்து தக்காளி வாங்கி விற்க வேண்டிய நிலை உள்ளது. உள்ளூர் வரத்து இயல்பானாலும், விசேஷ தின விற்பனை குறைந்த பின் தான், விலை குறையும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ