உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல்லடத்தில் பல்லாங்குழி ரோடு: வாகன ஓட்டிகள் பெரும்பாடு

பல்லடத்தில் பல்லாங்குழி ரோடு: வாகன ஓட்டிகள் பெரும்பாடு

பல்லடம்:பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, மேற்கு பல்லடத்தில், கொசவம்பாளையம் - வடுகபாளையம் செல்லும் இணைப்பு சாலை உள்ளது.தேசிய நெடுஞ்சாலையுடன், பொள்ளாச்சி ரோட்டை இணைக்கும் வழித்தடமாக இது பயன்பட்டு வருகிறது. குடியிருப்புகள், கடைகள், பள்ளிகள், கோவில்கள் உள்ளிட்டவை இப்பகுதியில் இருப்பதால், ஏராளமான வாகன ஓட்டிகள் இந்த ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர்.-பொள்ளாச்சி ரோட்டில் பாலம் கட்டுமான பணி நடந்து வருவதால், வாகன ஓட்டிகள் பலர் மாற்று வழித்தடமாக இந்த ரோட்டை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில், இந்த வழித்தடத்தில் அதிகப்படியான வாகன போக்குவரத்து உள்ளது.கொசவம்பாளையம் ரோட்டில் இருந்து வடுகபாளையத்துக்குச் செல்லும் வழியில், விநாயகர் கோவில் அருகே, பல்லாங்குழி போன்ற பள்ளம் உள்ளது. நீண்ட காலமாக உள்ள இந்த பள்ளத்தை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஜல்லிக்கற்கள் சிறிது சிறிதாக பெயர்ந்து பள்ளம் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது.குறுகிய ரோடு என்பதுடன், வளைவான பகுதி என்பதால், இங்கு திரும்பும் வாகனங்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. ரோட்டை புதுப்பிக்காவிட்டாலும், பள்ளத்தை மூட சீரமைப்பு பணியாவது மேற்கொள்ள வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ