உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொதுத்தேர்வில் சிறப்பிடம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

பொதுத்தேர்வில் சிறப்பிடம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

உடுமலை;மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.கடந்தாண்டுபிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்த மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கும் விழா, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.விழாவிற்கு, தலைமையாசிரியர் கவிதா தலைமை வகித்தார். பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சரவணன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சித்ராதேவி வரவேற்றார்.மடத்துக்குளம் அரசு பள்ளியில் பணிசெய்து மறைந்த ஆசிரியர் ரங்கராஜ் நினைவாக, அதன் அறக்கட்டளையின் சார்பில், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.கடந்த பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு, பழனியாண்டவர் கலைக்கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் செந்தமிழ் செல்வி பரிசுகளை வழங்கினார்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மருதமுத்து, காளீஸ்வரராஜ், பழனி நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ரங்கராஜ் உட்பட பலர் விழாவில் பங்கேற்றனர். எஸ்.கே.பி., பள்ளி தமிழாசிரியர் சேஷநாராயணன் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ