உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பச்சிளங்குழந்தை பலி; மருத்துவமனை மீது புகார்

பச்சிளங்குழந்தை பலி; மருத்துவமனை மீது புகார்

திருப்பூர்:திருப்பூர், காங்கயம் ரோட்டை சேர்ந்த பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.சமீபத்தில் நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு, குழந்தை பிறக்க, இரண்டு மாதங்கள் இருந்த நிலையில், கடந்த, 13ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது.அப்பெண்ணை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு பெண் குழந்தை பிறந்தது. பச்சிளங் குழந்தைவார்டில் வைத்து குழந்தை பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை குழந்தை இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இவ்விஷயத்தில் டாக்டர்கள் முறையாக தகவல் கொடுக்கவில்லை. அவர்களின் அலட்சியம் காரணமாக குழந்தை இறந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.இதுதொடர்பாக, பணியில் இருந்த டாக்டர்கள் மீது புகார் தெரிவித்து மருத்துவ கல்லுாரி 'டீன்' இடம் பெண்ணின் குடும்பத்தினர் புகார் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ