உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொரியல் தட்டை சாகுபடியில் ஆர்வம்

பொரியல் தட்டை சாகுபடியில் ஆர்வம்

உடுமலை,; குறைந்த தண்ணீரிலும் செழிக்கும் பொரியல் தட்டை சாகுபடியில், ஈடுபட உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.உடுமலை பகுதியில், நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள பகுதிகளில், 60 நாட்களில் பயனுக்கு வரும் பொரியல் தட்டை சாகுபடியிலும், தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.முன்பு, பழநி, ஒட்டன்சத்திரம் சுற்றுப்பகுதிகளில் பொரியல் தட்டை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வந்தது.உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி, கேரளா , மூணாறு, மறையூர் பகுதிகளுக்கும், பொரியல் தட்டை அதிகளவு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது. வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களிலேயே கொள்முதல் செய்து வருகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: பொரியல் தட்டை அனைத்து வகை நிலங்களிலும், அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யலாம். குளிர் சீதோஷ்ண நிலை உள்ள உடுமலை பகுதியில், நல்ல மகசூல் கிடைக்கிறது.விதைப்பு செய்த, 50வது நாள் முதல் காய்கள் தினமும் பறிக்கலாம். தினமும், ஏக்கருக்கு, 100 முதல் 150 கிலோ வரை கிடைக்கிறது. ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது; 10 டன் வரை மகசூல் கிடைக்கிறது.வழக்கமாக, ஓணம் சீசனில், பொரியல் தட்டைக்கு நல்ல விலை கிடைக்கும். தொழிலாளர் தேவை குறைவாக உள்ளதால், இரு சீசன்களில் பயிரிடுகிறோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !