உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரப்புகளில் மரம் வளர்க்க ஆர்வம்: மானிய திட்டத்துக்கு எதிர்பார்ப்பு 

வரப்புகளில் மரம் வளர்க்க ஆர்வம்: மானிய திட்டத்துக்கு எதிர்பார்ப்பு 

உடுமலை:வரப்புகளில் மரம் வளர்ப்பு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், மரக்கன்றுகளை வேளாண்துறை வாயிலாக வினியோகிக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், பல ஆயிரம் ஏக்கரில், விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. பி.ஏ.பி., அமராவதி அணை பாசனத்துக்கும், கிணற்றுப்பாசனத்துக்கும், மானாவாரியாகவும், காய்கறி, தானியங்கள் சாகுபடி செய்கின்றனர்.இத்தகைய விளைநிலங்களில், மழை நீரை சேகரிக்கவும், பாசன மேலாண்மைக்காகவும், வரப்புகள் அமைக்கின்றனர். இத்தகைய வரப்புகளில் முன்பு உயிர் வேலியாக பல்வேறு மரங்கள் மற்றும் செடிகள் நட்டு பராமரித்து வந்தனர்.பின்னர் களைக்கொல்லி பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், உயிர்வேலி அமைத்தல் முற்றிலுமாக கைவிடப்பட்டது. தற்போது, வரப்புகளில் மண் அரிப்பை தடுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக, மரங்கள் வளர்க்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.குறிப்பாக, தேக்கு உள்ளிட்ட அதிக உயரம் வளரும் மரங்களை பராமரிப்பதால், பல்வேறு பலன்கள் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால், வரப்பு நடவுக்கு தேவையான மரக்கன்றுகள் போதியளவு விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.முன்பு, வேளாண்துறை சார்பில், மரக்கன்றுகள் மானியத்தில், வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் குறைந்தளவு விவசாயிகளே பயன்பெற்றனர்.தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கியுள்ள நிலையில், வரப்புகளில் மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ், வேளாண்துறை சார்பில், வட்டார வாரியாக மரக்கன்றுகள் வினியோகிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை