உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கேமரா, டிவி கொள்முதலில் முறைகேடு மாநிலம் முழுதும் பேரூராட்சிகளில் பீதி

கேமரா, டிவி கொள்முதலில் முறைகேடு மாநிலம் முழுதும் பேரூராட்சிகளில் பீதி

திருப்பூர்:கடந்த, 2020 - 21ல், மாநிலம் முழுக்க உள்ள பேரூராட்சிகளில், 'வீடியோ கான்பிரன்ஸ்' பயன்பாட்டுக்கென, 40 அங்குல சோனி டிவி, கம்ப்யூட்டர் சி.பி.யு., கேமரா உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக, தற்போது, கரூர் மாவட்ட ஊழல் தடுப்புப்பிரிவு போலீஸ் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றிய பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மற்றும் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, புலியூர், புகளூர், புஞ்சை புகளூர், உப்பிடமங்கலம் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மீதும், 'டிவி' உள்ளிட்ட உபகரணங்களை சப்ளை செய்த, மகாலட்சுமி டிரேடர்ஸ் நிறுவன உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அரசு விதிப்படி, மூன்று நிறுவனங்களாவது டெண்டரில் பங்கேற்றிருக்க வேண்டும். குறைந்த ஒப்பந்தப்புள்ளி கோரும் நிறுவனத்துக்கே டெண்டர் வழங்க வேண்டும். ஆனால், விதிமுறை மீறி, இரு நிறுவனங்கள் மட்டுமே டெண்டர் கோரிய நிலையில், டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது. பொருட்களை வினியோகித்த சிவகுமார் என்பவர், நேரடி டீலர் இல்லை; தனி நபர்.அவர், புதுக்கோட்டையில் உள்ள டீலரிடம் இருந்து, டிவி, சி.பி.ய., கேமரா உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்துள்ளார். மொத்தம் 89,610 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, அவற்றை, 3 லட்சத்து 96 ஆயிரத்து 599 ரூபாய்க்கு பேரூராட்சிகளுக்கு சப்ளை செய்துள்ளார்.சந்தை விலையை விட மிக அதிக விலைக்கு பொருட்களை கொள்முதல் செய்து, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம், மாநிலம் முழுக்க உள்ள பேரூராட்சிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2020 - 21ம் காலகட்டத்தில், பணிபுரிந்த பேரூராட்சி அதிகாரிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை