உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இருவரை கைது செய்த கேரள போலீசார்

இருவரை கைது செய்த கேரள போலீசார்

அனுப்பர்பாளையம் : குன்னத்துார் அடுத்த வள்ளியரச்சல் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, 47; ரிக் உரிமையாளர். கடந்த 12 ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.வீட்டில் ஆள் இல்லாத அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, அங்கிருந்த 12 லட்சம் ரூபாய், 5 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடி சென்றனர்.குன்னத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட கேரள மாநிலம், பாலக்காடு ஆலந்துறை பகுதியை சேர்ந்த சுலைமான், 60, தாமரைசேரி தச்சன்கோவிலை சேர்ந்த முகமது நிஷார், 30, சந்திரன், 45 என மூன்று பேரை கடந்த 18ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். சுலைமான், முகமது நிஷார் மீது கேரள மாநிலத்தில் கார் திருட்டு, சங்கிலி பறிப்பு, உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.இருவரையும் திருப்பூர் போலீசார் கைது செய்ததை அறிந்த பாலக்காடு போலீசார் இவர்களை கார் திருட்டு, நகை பறிப்பு வழக்கில் கைது செய்து, விசாரணைக்கு அழைத்து சென்றதோடு, காரையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ