உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

அனுப்பர்பாளையம்;திருப்பூர், பல்லடம் ரோடு, தட்டான் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள விசாலாட்சி உடனமர் விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை, 9:30 முதல், 10:00 மணிக்குள் நடைபெறுகிறது.விழாவுக்கு, மாதொருபாகனார் அறக்கட்டளை தலைவர் சுந்தரகணேசனார் முன்னிலை வகிக்கிறார். கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, நேற்று மாலை பக்தர்கள் முளைப்பாலிகை எடுத்து, கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை, 9:15 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ