ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் கோவில் மஹா கும்பாபிேஷக விழா
திருப்பூர்;சூலுார் தாலுகா, காடாம்பாடி கிராமம், குமாரபாளையத்தில் உள்ள ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருப்பணிகள் நிறைவுற்றது. அதன் தொடர்ச்சியாக, கும்பாபிேஷக விழா, வரும், 8ம் தேதி கோலாகலமாக நடக்க உள்ளது.கும்பாபிேஷகத்துக்காக, வெள்ளியங்கிரி, மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில், பவானி கூடுதுறை, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில்களில் இருந்து, இன்று தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. நாளை, விநாயகர் பூஜை, 6ம் தேதி விக்னேஷ்வர பூஜை, முதல்கால பூஜைகள் துவங்குகின்றன. வரும், 6ம் தேதி மாலை, 3:00 மணிக்கு, சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவிலில் இருந்து, செண்டை மேளம், அலகுவீரர்கள் கத்திபோடும் நிகழ்ச்சி, காவடியாட்டம், வாணவேடிக்கையுடன் ஊர்வலம் துவங்குகிறது. மாலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை நடைபெறுகிறது.விழாவில், 7ம் தேதி காலை, மூன்றாம் கால வேள்வி பூஜையும், மாலை நான்காம்கால யாக வேள்வி பூஜையும் நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு, குபேர முருகன் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியும், இரவு, 7:00 மணிக்கு, ஐந்தாம்கால வேள்வி பூஜையும் நடக்கிறது. 8ம் தேதி அதிகாலை, 4:30 மணிக்கு, ஆறாம்கால வேள்வி பூஜை நடக்கிறது. அன்றைய தினம் காலை, 8:30 மணிக்கு மேல், 10:00 மணிக்குள், வலம்புரி விநாயகர், மாகாளியம்மன், சவுடேஸ்வரி அம்மன், ராஜநாக மகாமுனி, மகாமுனி, நவக்கிரஹம், குபேர முருகர் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் அறக்கட்டளை, இளைஞர் நற்பணி மன்றம், குமாரபாளையம் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.