உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண்டல பூஜை நிறைவு ;திரளான பக்தர்கள் வழிபாடு

மண்டல பூஜை நிறைவு ;திரளான பக்தர்கள் வழிபாடு

உடுமலை;உடுமலை முத்தையா பிள்ளை லே - அவுட் அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத சோழீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.உடுமலை முத்தையா பிள்ளை லே - அவுட் அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத சோழீஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா பிப்., 26ம் தேதி நடந்தது.இதைத்தொடர்ந்து நாள்தோறும், 48 நாட்களுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகளுடன் சுவாமிக்கு மண்டல பூஜை நடந்தது.நேற்று முன்தினம் மண்டல பூஜை நிறைவு வழிபாடு நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி