உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாய சங்கத் தலைவர் பழனிசாமிக்கு மணி மண்டபம்

விவசாய சங்கத் தலைவர் பழனிசாமிக்கு மணி மண்டபம்

பல்லடம் : கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:முன்னாள் விவசாய சங்கத் தலைவர் என்.எஸ்.பழனிசாமி நினைவாக, அவரது சொந்த ஊரான, பல்லடம் அடுத்த, நாத கவுண்டம்பாளையம் கிராமத்தில், அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. விவசாயிகள், விவசாய ஆர்வலர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மணிமண்டபத்தில், ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.மணிமண்டபத்துடன், விவசாய குடும்பத்தினர், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், நினைவு மண்டபமும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில், திருமணம், வளைகாப்பு, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் நிறைவடையும். வரும் ஆக., 18 அன்று திறப்பு விழா செய்ய தீர்மானித்துள்ளோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ