உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் அரசு பள்ளிக்கு அமைச்சர் சர்பிரைஸ் விசிட்  

திருப்பூர் அரசு பள்ளிக்கு அமைச்சர் சர்பிரைஸ் விசிட்  

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்துக்கு நேற்று 'சர்பிரைஸ் விசிட்' வந்த கல்வித்துறை அமைச்சர் மகேஷ், பெருமாநல்லுார் - காங்கேயம் ரோட்டில் உள்ள வாவிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்குள் மதியம், 1:00 மணிக்கு திடீரென நுழைந்தார். உடன் வந்த அலுவலர், அதிகாரிகளை பள்ளி கேட்டிலேயே நிற்கும்படி கூறிய மகேஷ், தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றார்.பத்தாம் வகுப்பு 'பி' பிரிவுக்குள் சென்ற அமைச்சர் மகேஷ், கணக்கு ஆசிரியர் குமார் பாடம் நடத்தி கொண்டிருந்ததை மாணவர்களோடு அமர்ந்து சில நிமிடம் கவனித்தார். பள்ளியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 'ைஹடெக்' ஆய்வகம் சென்று, 'ெஹட்போன்' பொருத்திக் கொண்ட அமைச்சர், 'கேள்வி, பதில் சரியாக கேட்கிறாதா, உங்களுக்கு புரிகிறதா?' என, மாணவியரிடம் கேட்டதும், அவர்கள் தலையாட்டினர்.அதன் பின், எட்டாம் வகுப்புக்கு சென்ற அமைச்சர், ஆசிரியர் பரமசிவத்திடம், 'கல்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்கள் பெயர் வாங்க ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்' என, அறிவுரை வழங்கினார்.பள்ளி மாணவர், ஆசிரியர் வருகை பதிவேடு, பள்ளி கழிப்பிடத்தின் நிலை, தேர்ச்சி சதவீதம், மதிய உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவு உள்ளிட்டவற்றை பார்வையிட்ட அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார்.மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கே தெரியாமல், எவ்வித முன் அறிவுறுத்தலும் இல்லாமல், திடீரென பள்ளிக்கு அமைச்சர், 'விசிட்' செய்ததால், ஆசிரியர்கள் பதட்டமாகினர். ஆனால் அமைச்சர், 'கூலாக' அறிவுரைகளை கூறி புறப்பட்டுச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி