உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மொபைல் போன் டவர் பொதுமக்கள் எதிர்ப்பு

மொபைல் போன் டவர் பொதுமக்கள் எதிர்ப்பு

அவிநாசி:அவிநாசியில் இருவேறு பகுதியில் மொபைல் போன் டவர் அமைக்க, குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து, பேரூராட்சி நிர்வாகத்தில் மனு அளித்தனர்.அவிநாசி, ராயம்பாளையம் பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவிலுக்கு பின் தனியார் நிலத்திலும், 6வது வார்டு, வ.உ.சி.,வீதியிலும் மொபைல் போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனையறிந்த, அப்பகுதி பொதுமக்கள் தாசில்தார், பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.இவ்விரு பகுதி பொதுமக்கள் கூறியதாவது:அரசு, தனியார் பள்ளிகள், பனியன் கம்பெனிகள், விசைத்தறிகள் என செயல்பட்டு வரும் பகுதியில் கடந்த மொபைல் போன்டவர்கள் அமைக்கப்படுகின்றனர். இதனால், அசம்பாவிதம் ஏற்படவும், டவரில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு உடல்நிலை பாதிக்கப்படும்.மொபைல் போன் டவர் அமைக்க பேரூராட்சி, வருவாய்த்துறை, போலீசார் ஆகியோரிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மொபைல் போன் டவர் அமைக்க தடை விதிக்க வேண்டும். இல்லாவிடில், தாலுகா மற்றும் பேரூராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை