உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாகன ஓட்டிகள் கோரிக்கை ஏற்பு

வாகன ஓட்டிகள் கோரிக்கை ஏற்பு

பல்லடம்:வாகன ஓட்டிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பல்லடத்தில், வாகன போக்கு வரத்துக்கான வழித்தடம் திறக்கப்பட்டது.பல்லடம் தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாநில நெடுஞ்சாலைகளும் இணைவதால், பல்லடம் நகர பகுதி எந்தநேரமும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும்.இதற்கிடையே, பொள்ளாச்சி ரோட்டில் உள்ள தரைமட்ட பாலம் கட்டுமான பணி நெடுஞ் சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பொள்ளாச்சி ரோடு வழியாக செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு மாற்றி வழித்தடம் ஏற்படுத்தப்பட்டது.பொள்ளாச்சி, உடுமலை ரோடு வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும், தேசிய நெடுஞ்சாலை வழியாக, தாராபுரம் ரோடு பிரிவு வரை சென்று, 'யு டர்ன்' எடுத்து பழைய பொள்ளாச்சி பைபாஸ் ரோடு வழியாக செல்லும் வகையில் மாற்று வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தது.இதனால், தேசிய நெடுஞ்சாலையில் மேலும் நெரிசல் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளுக்கு தேவையற்ற அலைச்சலுக்கு ஆளாகினர். எனவே, தேசிய நெடுஞ் சாலையுடன், பழைய பொள்ளாச்சி பைபாஸ் ரோடு இணையும் இடத்தில் உள்ள மையத்தடுப்பு கற்களை அகற்றி, வாகனங்கள் செல்லும் வகையில், தற்காலிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பலரும் வலியுறுத்தி வந்தனர்.வாகன ஓட்டிகள் பொதுமக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, பழைய பொள்ளாச்சி பைபாஸ் ரோடு சந்திப்பு அருகே, பொள்ளாச்சி, உடுமலை செல்லும் வாகனங்கள் திரும்பும் வகையில், மையத்தடுப்பு கற்கள் அகற்றப்பட்டு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ