உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முருகானந்தம் முழுவீச்சு

முருகானந்தம் முழுவீச்சு

லோக்சபா தேர்தல் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியானது முதல், திருப்பூர் பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம், கட்சியினர் சகிதம், பல்வேறு விதமாக மக்களை அணுகி ஓட்டுகளைச் சேகரித்து வருகிறார்.மற்ற கட்சிகளை காட்டிலும் வித்தியாசமாக மக்களை சந்திப்பது, முருகானந்தம் யாரென வாக்காளர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. மத்திய அரசு திட்டங்கள் செய்யப்பட்ட வளர்ச்சிப்பணிகள் உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கின்றனர்.தினமும் கட்சியினர் காலையில் கிளம்பி, தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் முன்பாகவே, அந்தந்த பகுதியில் மக்களுக்கு பரிச்சயமான நபர்களை அழைத்து கொண்டு சென்று பிரசாரம் செய்கின்றனர்.தி.மு.க.,வினர் சொன்ன வாக்குறுதிகள், செயல்படுத்தாமல் இருப்பதையும், மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய பழைய விஷயங்களை மீண்டும் நினைவூட்டியும் பிரசாரம் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை