| ADDED : ஜூலை 23, 2024 11:49 PM
திருப்பூர்:அவிநாசி அருகே பழங்கரையில் அமைந்துள்ள தி ஏர்னெஸ்ட் அகாடமி சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளி துவங்கி, 14 ஆண்டு துவங்கிய நிலையில், 'பள்ளி துவங்கிய தினம்' கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, மாணவ பிரதிநிதிகள் பதவியேற்பு விழாவும் நடந்தது.நிகழ்ச்சியில், பள்ளி இயக்குனர் உறுதிமொழி வாசிக்க, மாணவர் பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டனர். நான்காம் வகுப்பு மாணவிகள் ஹரினி, பகவதி ஆகியோர் இணைந்து, ஆங்கிலத்தில் எழுதிய 'டுவின் டிரையல்' என்ற ஆங்கில சிறுகதை நுால் வெளியிடப்பட்டது.ஆங்கிலத்துறை ஆசிரியர் எல்னா, நுால் அறிமுகம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார். 'டீ பப்ளிக்' பள்ளி இயக்குனர் டோரத்தி ராஜேந்திரன், நுாலை வெளியிட, தின ஏர்ெனஸ்ட் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் புவனேஸ்வரி, துணை முதல்வர் ராமலட்சுமி, வகுப்பாசிரியர் வித்யா பிரியா, நுாலகர் முத்துபாரதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.