உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆலையில் அதிகாரிகள் ஆய்வு

ஆலையில் அதிகாரிகள் ஆய்வு

பல்லடம் அடுத்த, வாவிபாளையம் ஊராட்சி, குள்ளம்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆலையால், நிலத்தடி நீர் மாசடைவதாக ஜமாபந்தி நிகழ்ச்சியில் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.நேற்று வருவாய்த்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், ஊராட்சி தலைவர் ஆகியோர், போலீஸ் பாதுகாப்புடன் ஆலையில் கள ஆய்வு மேற்கொண்டனர். ஆலைக்கு வெளிப்புறம் விவசாயிகள் காத்திருக்க, அரை மணி நேரத்துக்கு மேல் ஆய்வுப் பணி நடந்தது. ''ஆலைக்கு அனுமதி வழங்காததற்கான காரணம் குறித்து ஊராட்சி நிர்வாகம், 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்; அதுவரை ஆலை இயங்கக்கூடாது'' என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி