| ADDED : ஜூன் 22, 2024 11:42 PM
''ரசாயனப் பொருட்கள், மொறுமொறுன்னு வர்றதுக்கு நெறைய சேக்கறாங்க... அது ஒடம்புக்கு நல்லதில்ல...''திருப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் எழுதியுள்ள 'மொறு... மொறு' சிறுகதையில் இடம்பெற்றுள்ள வரிகள் இவை. கேரள பாட திட்டத்தில், ஒன்பதாம் வகுப்புக்கான தமிழ் பாடநுாலில் 'துரிதம் தவிர்' என்ற தலைப்பில் இந்த சிறுகதை இடம்பெற்றிருக்கிறது.செயற்கை நிறமூட்டிகள் சேர்த்து, உணவு பாதுகாப்பு விதியை காற்றில் பறக்க விட்டு, தயாரிக்கப்படும் துரித உணவுகள் உடலுக்கு எத்தகைய கேடு விளைவிக்கும் என்பதை சிறுகதை உணர்த்துகிறது.அவிநாசி அரசு கலைக்கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் மணிவண்ணன் எழுதிய 'பெய்த நுால்' என்ற கவிதை தொகுப்பில் இடம் பெற்றிருந்த, 'அமைதி யுத்தம்' என்ற கவிதை, கேரள அரசின், 8ம் வகுப்பு பாட திட்டத்தில் இடம் பெற்றது.உலகைப் பிளந்து பார்க்கும்கிளர்ச்சிக் கோடரிகளை பறிப்போம்...உள்ளத் தீவிரவாதியின் உணர்ச்சிஆயுதங்களைப்பிடுங்கிமனப்போர் நிறுத்துவோம்!என, மாணவர்கள் மத்தியில் தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக அந்த கவிதை இடம் பெற்றிருக்கிறது.இவ்வாறு, மாணவ, மாணவியர் மத்தியில் நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தமிழ் எழுத்தாளர்களின் கதை, கவிதைகள், எல்லை தாண்டி, கேரள மாநில பாட புத்தகத்தில் இடம் பெறுவது, நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு பெருமை சேர்ப்பதாகும்.