மேலும் செய்திகள்
நடமாடும் நுாலகம் தேவை எஸ்டேட்களில் எதிர்பார்ப்பு
19-Aug-2024
உடுமலை : 'தினமலர்' செய்தி எதிரொலியாக ஓராண்டாக மூடப்பட்டிருந்த மானுப்பட்டி பகுதி நேர நுாலகம் வாசகர்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இதனால், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.உடுமலை ஒன்றியம் மானுப்பட்டியில், கடந்த, 2017ல், கிராம மக்கள் பங்களிப்புடன், பகுதி நேர நுாலகம் துவக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழு வாயிலாக துவக்கப்பட்ட இந்நுாலகம், அண்ணா மறுமலர்ச்சி திட்ட கட்டடத்தில், செயல்பட்டு வந்தது.அப்பகுதி மக்களின் அதிக ஆர்வம் மற்றும் வாசிப்பு குறித்த விழிப்புணர்வு காரணமாக, நுாலகத்தில், 1,300க்கும் அதிகமான உறுப்பினர்களாக சேர்ந்தனர். இதனால், பகுதி நேர நுாலகத்தை கிளை நுாலகமாக தரம் உயர்த்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், முறையான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படாமல், மானுப்பட்டி பகுதி நேர நுாலகம் பூட்டப்பட்டது.அதிகளவு மக்களும், மாணவர்களும் பயன்படுத்தி வந்த நுாலகம், எவ்வித காரணமும் இல்லாமல் பூட்டியே கிடப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில், செப்., 3ல், செய்தி வெளியானது.இதையடுத்து, பொது நுாலகத்துறை இணை இயக்குனர், நுாலகத்தை திறக்க உடனடி நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட நுாலகருக்கு உத்தரவிட்டார்.உத்தரவு அடிப்படையில், மானுப்பட்டி பகுதி நேர நுாலகத்துக்கு உடனடியாக தற்காலிக பணியாளர் நியமிக்கப்பட்டு, பூட்டியிருந்த கட்டடம் திறக்கப்பட்டது.மேலும், ஊராட்சி நிர்வாகம் வாயிலாக துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பகுதி நேர நுாலகம் வாசகர்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. ஓராண்டாக பூட்டியிருந்த பகுதி நேர நுாலகம் திறக்கப்பட்டதால், மானுப்பட்டி கிராம மக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவியர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
19-Aug-2024