உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டிலேயே இறக்கி விடப்படும் பயணிகள்

ரோட்டிலேயே இறக்கி விடப்படும் பயணிகள்

திருப்பூர்; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் வெளிப்புறத்தில் பயணிகளை இறக்கி விடும் பஸ்களால் பெரும் அவதி நிலவுகிறது.திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான மத்திய பஸ் ஸ்டாண்ட் காமராஜ் ரோட்டில் அமைந்துள்ளது. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தும், பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் பஸ்கள் ஏராளமாக இங்கு வந்து செல்கின்றன. இது தவிர நகரப் பகுதியில் இயங்கும் மினி பஸ்களும் இந்த பஸ் ஸ்டாண்ட்டுக்கு வருகின்றன.திருப்பூர் தெற்கு பகுதியிலிருந்து மத்திய பஸ் ஸ்டாண்ட் வந்து, அவிநாசி ரோடு வழியாகச் செல்லும் பஸ்கள், பி.என்., ரோடு வழியாக புது பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்குச் ெசல்லும் பஸ்கள், ஊத்துக்குளி வழியாகச் செல்லும் வெளியூர் பஸ்களும் இங்கு வந்து செல்கின்றன.இதில் ஒரு சில பஸ்கள் மத்திய பஸ் ஸ்டாண்ட்டின் உட்புறம் சென்று திரும்புவதில்லை. இந்த பஸ்கள் பஸ் ஸ்டாண்டின் வெளிப்புறத்தில் காமராஜ் ரோடு பகுதியிலேயே நின்று பயணிகளை இறக்கி விட்டுச் செல்கின்றன.இதனால், வெளியூர்களிலிருந்து லக்கேஜ் எடுத்து வரும் பயணிகள், பெண் பயணிகள், வயது முதிர்ந்தோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.மேலும், இந்த பஸ்கள் பிரதான ரோட்டில் நின்று பயணிகளை இறக்கி விடும் நேரத்தில் காமராஜ் ரோட்டில் மற்ற வாகனங்கள் செல்வதிலும் அவதியும், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து வேறு பகுதிக்கு பஸ்களில் தங்கள் பயணத்தை தொடரவுள்ள பயணிகள் மீண்டும் பஸ் ஸ்டாண்ட் உட்புறம் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.பஸ்கள் முறையாக பஸ் ஸ்டாண்ட் உட்புறம் சென்று திரும்ப வேண்டும் அல்லது ரோட்டில் நிற்பதற்குப் பதிலாக பஸ் ஸ்டாண்ட் முன்புறம் உள்ள காலி இடத்திலாவது பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விட வேண்டும் என, போக்குவரத்து துறையினர், போலீசார் அறிவுறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை