உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்றத்துக்கு மக்கள் தயாராகி விட்டனர்; நடிகர் விக்னேஷ்

மாற்றத்துக்கு மக்கள் தயாராகி விட்டனர்; நடிகர் விக்னேஷ்

உடுமலை;''திராவிட கட்சிகளுக்கு தொடர்ந்து ஓட்டளித்து, ஏமாற்றத்தில் உள்ள மக்கள் மாற்றத்துக்கு தயாராகி விட்டனர்,'' என, திரைப்பட நடிகர் விக்னேஷ் பெதப்பம்பட்டியில் பேசினார்.பொள்ளாச்சி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜனை ஆதரித்து, திரைப்பட நடிகர் விக்னேஷ் பெதப்பம்பட்டியில் பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது: நீண்ட காலமாக, தி.மு.க., அ.தி.மு.க., என மாற்றி மாற்றி ஓட்டு போட்டும், மாநிலத்தில் எவ்வித வளர்ச்சியும் இல்லை.பிரதமர் மோடி எவ்வித குற்றச்சாட்டும் இல்லாத அளவுக்கு நல்லாட்சி செய்து வருகிறார். மக்கள் மாற்றி யோசிக்க வேண்டிய தருணம் இதுவாகும்.பிரதமர் மோடியின் திட்டங்களை, மாநில அரசு செய்ததாக, ஸ்டிக்கர் ஒட்டி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.திராவிட கட்சிகளுக்கு தொடர்ந்து ஓட்டளித்து ஏமாந்த மக்கள், மாற்றத்துக்கு தயாராகி பா.ஜ., வை ஆதரிக்க துவங்கியுள்ளனர். இந்த தேர்தல் மாற்றத்துக்கான தேர்தல்; இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்.இவ்வாறு, நடிகர் விக்னேஷ் பேசினார். பிரசாரத்தின் போது, பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ