உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்கள் புகார்; கலெக்டர் ஆய்வு

மக்கள் புகார்; கலெக்டர் ஆய்வு

தாராபுரம் தாலுகா, சின்னக்காம்பாளையத்தில் செயல்படும் கோழிப்பண்ணையால் சுகாதார சீர் கேடு ஏற்படுவதாகவும்; கோழிப்பண்ணையை அகற்றக்கோரியும் அப்பகுதி பொதுமக்கள் கடந்த 8ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு, கருப்பு நிற பூச்சிகளை பாட்டிலில் அடைத்து எடுத்துவந்தனர். கோழிப்பண்ணையிலிருந்து உருவாகி, குடியிருப்பு பகுதி முழுவதும் பரவும் பூச்சிகளால் பாதிப்பு ஏற்படுவதாக மனு அளித்தனர்.கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் அதிகாரிகள் குழுவினர், நேற்றுமுன்தினம் சின்னக்காம்பாளையம் சென்றனர். கோழிப்பண்ணைகளுக்கு சென்று, ஆய்வு மேற்கொண்டனர். கருப்பு நிற பூச்சிகள் பரவுவதை ஆய்வு செய்த கலெக்டர், பூச்சிகளை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ