உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தலைக்கவசம் அணிவதற்கு போலீசார் விழிப்புணர்வு

தலைக்கவசம் அணிவதற்கு போலீசார் விழிப்புணர்வு

உடுமலை : உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தலைக்கவசம் அணிவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் அப்துல்காதர் தலைமை வகித்தார்.தொடர்ந்து 'நோ ெஹல்மெட் நோ கீ' என்ற தலைப்பில் போக்குவரத்துத்துறை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் மாணவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்துகள் குறித்தும், அணிந்து செல்வதால் உள்ள நன்மைகள், உயிர் பாதுகாப்பு குறித்தும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி