உள்ளூர் செய்திகள்

போலீஸ் டைரி

டிப்பர் லாரி மோதி வாலிபர் பலிதாராபுரம் நோக்கி பைக்கில், தனியார் நிதி நிறுவன ஊழியர் ராதாகிருஷ்ணன், 29 என்பவர், சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள குவாரியிலிருந்து ஜல்லி ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த ராதாகிருஷ்ணன், சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணிடம் நகை பறிப்பு கோவில்பாளையத்தை சேர்ந்த மாரியப்பன் மனைவி தமிழ்ச்செல்வி, 32. கொடுவாயில் பேன்ஸி மற்றும் பியூட்டி பார்லர் வைத்துள்ளார். அவிநாசிபாளையத்துக்கு டூவீலரில் சென்றபோது, இரு ஆசாமிகள் டூவீலரில் வந்து தமிழ்ச்செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த செயினை பிடித்து இழுத்தனர். அவர் கெட்டியாக பிடித்துக் கொண்டதால் பாதி செயினை அறுத்துக் கொண்டு தப்பிவிட்டனர். ஒன்றரை பவுன் நகையை பறி கொடுத்த அவர் அவிநாசிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். திருடர்களை போலீசார் தேடுகின்றனர். பணம் தர மறுத்தவருக்கு வெட்டுகாங்கயம், தாராபுரம் ரோட்டைச் சேர்ந்தவர் தர்மதுரை, 27. அங்குள்ள டாஸ்மாக் மதுக்கடை பாரில் வேலை செய்து வருகிறார். மது அருந்த வரும், கம்பளியம்பட்டியைச் சேர்ந்த பிரேம்குமார், 30, என்பவர், தர்மதுரையிடம் மதுஅருந்த பணம் கேட்டு தகராறு செய்தார். தகராறு முற்றிய நிலையில் தர்மதுரையை, அங்கிருந்த அரிவாளை எடுத்து பிரேம்குமார் வெட்டினார். காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். வழக்கு பதிவு செய்த காங்கயம் போலீசார் பிரேம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ