உள்ளூர் செய்திகள்

போலீஸ் டைரி

வாலிபர் பலி

கேரளாவை சேர்ந்தவர் சந்தோஷ், 18. திருப்பூர் காங்கயம் ரோடு நல்லுாரில் தங்கி பேக்கரியில் வேலை செய்து வந்தார். நள்ளிரவு ராக்கியாபாளையம் நோக்கிடூவீலரில் சென்றார். திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனில் டூவீலர் மோதியதில் பலியானார். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா பறிமுதல்

ஊத்துக்குளி, வண்ணாங்காடு அய்யனார் கோவில் அருகே, கஞ்சா விற்பனை நடப்பதாக, போலீசுக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த கேரளாவை சேர்ந்த செல்வக்குமார், 22 மற்றும் பழனி ஆயக்குடியை சேர்ந்த கார்த்திக்குமார், 31 ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.அவர்களிடம், விற்பனைக்கு வைத்திருந்த, மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார், கோவை சிறையில் அடைத்தனர்.l கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் நடந்த ஆய்வில், ஒடிசாவை சேர்ந்த, அனில்குமார் பட்னாயக், 32 என்பவரை விசாரித்தனர். அவரிடம், 2.800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். அந்நபரை கைது செய்த ஊத்துக்குளி போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.

ஊழியர் பலி

திருப்பூர், அடுத்த திருமுருகன்பூண்டி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் அண்ணாமலை, 43, தனியார் நிறுவன ஊழியர். இரவு பைக்கில் திருப்பூர் அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அம்மாபாளையம் அருகே சென்றபோது, பைக் நிலை தடுமாறிடிவைட ரில் மோதியதில் பலியானார். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தம்பதி மீது தாக்குதல்

மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த கபீர் மோண்டல், 38, இவரது மனைவி ரஜினா மோண்டல், 35. இவர்கள் காங்கயம், நத்தக்காடையூரில் தங்கி வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியை சேர்ந்த உலகநாதன், 35 வீட்டுக்கு வந்தார். நிறுவனத்தின் கேட்டை ஏறி குதித்த உலகநாதன், கேட்டின் சாவியை கேட்டார். அதற்கு, ரஜினா மோண்டல், நிறுவன உரிமையாளர் சொன்னால் மட்டுமே சாவி தருவேன் என்று கூறினார். இதனால், பீர் பாட்டிலை எடுத்து, தம்பதியை தாக்கிமிரட்டல் விடுத்து சென்றார்.உலகநாதனை காங்கயம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை