| ADDED : ஜூலை 29, 2024 03:09 AM
உடுமலை;உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஆன்லைனில் துவங்கியது.நடப்பு, 2024 - 25 கல்வியாண்டுக்கான, முதுநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கல்லுாரி கல்வி இயக்ககத்தின் வழிமுறை அடிப்படையில் ஆன்லைனில் நடக்கிறது. இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்கிறது.உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் முதுநிலை பட்டப்பிரிவில் தமிழ் இலக்கியம் (40), ஆங்கில இலக்கியம் (20), பொருளியல் (20), வணிகவியல் (40), சுற்றுலாவியல் (20), கணிதவியல் (20), புள்ளியியல் (15), இயற்பியல் (30), வேதியியல் (20), கம்ப்யூட்டர் சயின்ஸ் (40) என மொத்தமாக 265 இடங்களுக்கான சேர்க்கை நடக்க உள்ளது. இந்த பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.inஎன்ற இணையதளத்தில் ஜூலை 27ம் தேதி முதல் ஆக., 7ம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், தேசிய மாணவர் படை மற்றும் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக., 13ம் தேதியும், பொது கலந்தாய்வு 19ம் தேதியும் நடக்கிறது.ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்டு, பதிவிறக்கம் செய்த விண்ணப்பங்களை சேர்க்கையின் போது சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் ஆக., 10ம் தேதி www.gacudpt.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.இந்த தகவலை, கல்லுாரி முதல்வர் கல்யாணி தெரிவித்தார்.