உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

அவிநாசி: அவிநாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் உள்ள செந்துார் மஹால் திருமண மண்டபத்தில், 'மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்' நடைபெற்றது.இதில், வேலாயுதம்பாளையம் மற்றும் செம்பியநல்லுார் கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு அடிப்படை வசதிகளுக்காக மனு அளித்தனர். முகாமில், பி.டி.ஓ., ரமேஷ் (பொது), விஜயகுமார் (கிராமம்) மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.இம்முகாமில் அரசு துறை சார்ந்த பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இ--சேவை மையமும், மருத்துவ குழுவினர் ஆகியோருடன் பொதுமக்கள் பயன்பெறும் விதமாக முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு அரசு துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர். முகாமில், பல்வேறு கோரிக்கைகளுக்காக, 1,332 மனுக்கள் பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ