உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இலங்கை தமிழர் முகாமில் வீடுகள் பயனாளிக்கு வழங்கல்

இலங்கை தமிழர் முகாமில் வீடுகள் பயனாளிக்கு வழங்கல்

அவிநாசி; அவிநாசி வாரச்சந்தையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 5 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.அவிநாசி, கைகாட்டிப்புதுார் அருகிலுள்ள சந்தைப்பேட்டை பகுதியில், 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில், 2022 -- 23ம் ஆண்டின் இலங்கைத் தமிழர் நலன் மேம்பாடு திட்டத்தில் ஐந்து வீடுகள் கட்டப்பட்டன. இதனை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி மற்றும் கலெக்டர் கிறிஸ்துராஜ் திறந்து வைத்து, பயனாளிகள் அனைவருக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்டில் மூலதன மானியத் திட்டத்தின் கீழ், 6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வணிக வளாக மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம், அவிநாசி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, செயல் அலுவலர் சண்முகம், தாசில்தார் சந்திரசேகர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ரமேஷ்குமார், விஜயகுமார், திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் பத்மநாபன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பழனிசாமி, கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை