உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் இன்றி மாணவர் தவிப்பு: நாளை பொதுமக்கள் மறியல்

பஸ் இன்றி மாணவர் தவிப்பு: நாளை பொதுமக்கள் மறியல்

அனுப்பர்பாளையம்:திருப்பூர், காவிலிபாளையம் மற்றும் காவிலிபாளையம் புதுார் வழித்தடங்களில் 39 மற்றும் 47 டி ஆகிய இரு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. அப்பகுதியில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிக்காக ரோடு தோண்டப்பட்டது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நிறைவு பெற்று ரோடும் புதுப்பிக்கப்பட்டது. ஆனாலும் நிறுத்தப்பட்ட பஸ்கள் இயக்கப்படவில்லை. குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இப்பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பஸ் வசதி இல்லாததால், காலை மாலை இரு வேளையும் 20 ரூபாய் கொடுத்து ஷேர் ஆட்டோவில் செல்கின்றனர். பனியன் நிறுவன தொழிலாளர்களும் தவிக்கின்றனர். காவிலிபாளையத்தில் மருத்துவமனையும், காவிலிபாளையம் புதுாரில் தொடக்கப்பள்ளியும் உள்ளது. மக்கள் நடந்தே செல்ல வேண்டியுள்ளது. பஸ்களை இயக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் நாளை(23ம் தேதி) சிறு பூலுவபட்டியில் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்து உள்ளனர்........


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை