மேலும் செய்திகள்
மாணிக்க விநாயகருக்கு கும்பாபிேஷகம்
06-Sep-2024
அவிநாசி:அவிநாசி அருகேயுள்ள மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோவிலில், புரட்டாசி திருவிழா 14 ம் தேதி துவங்குகிறது.ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்துக்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதிதேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மகா விஷ்ணு. அதன் காரணமாக, புரட்டாசி மாதத்தில் மகா விஷ்ணுவுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.அவ்கையில், அவிநாசி ஒன்றியம், ஆலத்துார் ஊராட்சியிலுள்ள மேலத்திருப்பதி எனப்படும் மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத சனிக்கிழமை வழிபாடு, 14ம் தேதி துவங்கி, அக்., 19ம் தேதி வரை, ஆறு சனிக்கிழமை நடக்கிறது.ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை, அதிகாலை, 5:00 மணிக்கு மகா அபிேஷகம் மற்றும் திருமஞ்சனம், இரவு, 7:30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி திருவீதியுலா புறப்பாடு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. உற்சவ நாட்களில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற, கோவிலில் துலாபாரமும் நிறுவப்பட்டுள்ளது. புரட்டாசி மாத வழிபாட்டில், ஒவ்வொரு வாரமும் சிறப்பு பஜனை, பரதநாட்டியம், பாரம்பரிய கிராமிய நிகழ்ச்சி, நாமசங்கீர்த்தனம் போன்ற கலை நிகழ்ச்சிகள், காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 வரை நடக்க உள்ளது.
06-Sep-2024