உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தரமான விதைகளே விளைச்சலுக்கு ஆதாரம்

தரமான விதைகளே விளைச்சலுக்கு ஆதாரம்

பல்லடம் : ''நல்ல தரமான விதைகளே விளைச்சலுக்கு ஆதாரமாகும்'' என, பல்லடம் வேளாண் விதை பரிசோதனை மைய அலுவலர் வளர்மதி கூறினார்.அவர் கூறியதாவது: விதை, நீர் மற்றும் உரம் ஆகியவை விவசாயத்துக்கு மிக முக்கியமான இடுபொருட்களாகும். விதை தரம் என்பது ஒரு விதையின் முளைப்புத் திறன், புறத்துாய்மை, ஈரப்பதம் மற்றும் பிற ரக கலப்பு ஆகியவற்றை குறிக்கும். பயிருக்கு இடப்படும் இடுபொருட்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டு, அதிக மகசூல் பெற, பயிர் எண்ணிக்கை பராமரிப்பு என்பது மிக அவசியம். ஒரு பயிரின் பயிர் எண்ணிக்கை என்பது அதன் முளைப்புத் திறனை பொறுத்தே அமையும். தரமான விதைகளை விதைப்பு செய்யாவிட்டால், போதுமான பயிர் எண்ணிக்கை பராமரிக்கப் படாமல் விளைச்சல் குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். வயலில் தேவையான பயிர் எண்ணிக்கை பராமரிக்க குறைந்தபட்ச முளைப்புத் திறனுக்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும். விதை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் விதைகளின் முளைப்புத்திறன் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும், விவசாயிகள் இதுகுறித்து தெரிந்து கொள்ள பல்லடம், திருச்சி ரோடு திருநகர் காலனியில் உள்ள வேளாண் விதை பரிசோதனை மையத்தை அணுகலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை