உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயில் நிலைய லிப்ட் பயணிகள் குழப்பம்

ரயில் நிலைய லிப்ட் பயணிகள் குழப்பம்

திருப்பூர்;திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முதல் மற்றும் இரண்டாவது பிளாட்பார்முக்கு பயணிகள் செல்ல வசதியாக மேற்கு புறத்தில், ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் அருகே புதிதாக 'லிப்ட்' நிறுவப்பட்டு, நடப்பாண்டு துவக்கத்தில் பயன்பாட்டுக்கு வந்தது. முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென திறக்கப்பட்டதால், 'லிப்ட்' செயல்படுவது பயணிகள் பலருக்கு தெரிவதில்லை.ஸ்டேஷனில் இருந்து வெளியேறும் வழியை தேடி அலைந்து, ஒட்டுமொத்தமாக, 500க்கும் அதிகமான பயணிகள் ஒரே வழியில் வெளியே செல்கின்றனர். 'லிப்ட்' இருக்குமிடம் குறித்த அறிவிப்பை பயணிகள் பார்வைக்கு தெரியும் படி, அங்காங்கே வைக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ