உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உருத்தெரியாமல் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு!

உருத்தெரியாமல் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு!

திருப்பூர்:கொளுத்தும் கோடை வெயில், தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் தவித்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.திருப்பூர் மாநகர, ஊரகப்பகுதியில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை கண்காணித்து, முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய உள்ளாட்சி நிர்வாகங்கள், இதுகுறித்து அக்கறை காட்டாமல் உள்ளன. மாநிலத்தில், தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கவும், அரசு அலுவலகங்கள் முதற்கொண்டு அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்களிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என, அரசு அறிவுறுத்தி வருகிறது.அதற்கேற்ப, அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலான அரசு அலுவலகங்களில் அமைக்கப்பட்டு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, பராமரிப்பின்றி, 'கணக்கு' காண்பிக்கும் வகையில் மட்டுமே உள்ளது. பல வீடுகள், வணிக வளாகம், கடைகளில் மழைநீர் சேகரிப்புக்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை.'மழைநீர் தான் உயிர் நீர்' என்ற நிலை வந்த பிறகு, மழைநீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும், உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை மாவட்ட நிர்வாகம் ஊக்குவிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ