உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷன் ஊழியருக்கு பாதுகாப்பு வேண்டும்

ரேஷன் ஊழியருக்கு பாதுகாப்பு வேண்டும்

திருப்பூர் : தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் ஒதுக்கீடு குறைவாக வரும்போது, கார்டுதாரர்களுக்கு பணியாளர்களால் முழுமையாக வழங்க முடிவதில்லை. இதனால், ஊழியர்களுடன் கார்டுதாரர்கள் வாக்குவாதம் செய்வதும், சில இடங்களில் கைகலப்பு ஏற்படுவதும் நடக்கிறது.இதற்கு தீர்வு காண அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான ஒதுக்கீடு வழங்க வேண்டும்; முழுமையான ஒதுக்கீடு தவறாமல் வழங்க வேண்டும். மேலும், ஊழியர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். கடைகளில் இது குறித்து எச்சரிக்கை அறிவிப்பும் வைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை