உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உயிர் பிரியும் தருவாயிலும் டிரைவரின் செயலால் நெகிழ்ச்சி

உயிர் பிரியும் தருவாயிலும் டிரைவரின் செயலால் நெகிழ்ச்சி

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், கே.பி.சி., நகரை சேர்ந்தவர் சேமலையப்பன்,, 48. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி வேன் டிரைவர். அதே வேனில், அவரது மனைவி லலிதா உதவியாளராக பணியாற்றி வருகிறார்.நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, பள்ளி வேலை நேரம் முடிந்து, 20 குழந்தைகளை பள்ளி வேனில் அழைத்துக் கொண்டு சென்றார். வெள்ளக்கோவில் போலீஸ் ஸ்டேஷன் அருகே திருச்சி ரோட்டில் சென்ற போது, திடீரென சேமலையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. வலியில் துடித்த அவர் சிரமப்பட்டு, வேனை பாதுகாப்பாக ரோட்டோரம் நிறுத்திய நிலையில், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.இதைப்பார்த்த அவரது மனைவியும், பள்ளி குழந்தைகளும் கதறி அழுதனர். வெள்ளக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர். உயிர் போய் விடும் என்பதை உணர்ந்த டிரைவர் சேமலையப்பன், குழந்தைகளுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்ற எண்ணத்தில், வேனை பாதுகாப்பாக நிறுத்தி, பலரது உயிரை காப்பாற்றியது, வெள்ளகோவில் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை