உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுரங்க பாலத்தில் மேற்கூரை பணி; விரைவாக முடிக்க வலியுறுத்தல்

சுரங்க பாலத்தில் மேற்கூரை பணி; விரைவாக முடிக்க வலியுறுத்தல்

உடுமலை : ரயில்வே சுரங்க பாலத்தில், மழை நீர் தேங்காமல் இருக்க, மேற்கூரை அமைக்கும் பணி இழுபறியாக இருப்பதால், மழைக்காலத்தில், போக்குவரத்து பாதிக்கும் நிலை உள்ளது.திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதை பணிகள் மேற்கொள்ளும் போது, உடுமலை பகுதியில், கிராமங்கள், குடியிருப்புகளுக்கு செல்லும் வழித்தடத்தில், ரயில்வே சுரங்க பாலங்கள் கட்டப்பட்டன.இந்த பாலங்களில், மழை நீரை வெளியேற்ற எவ்வித கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில், பாலங்களில் தண்ணீர் தேங்கி, அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.குறிப்பாக, பாலப்பம்பட்டி, பெரியார் நகர், ராகல்பாவி பிரிவு, அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில், அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சுரங்க பாலங்களில், மழை நீர் தேங்குவதை தவிர்க்க, ரயில்வே நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன்படி, பாலத்தின் இருபுறங்களிலும், சுரங்கப்பாலத்தின் மீது மேற்கூரை அமைக்கும் பணிகள் துவங்கியது. மேற்கூரை அமைக்கும் போது, மழை நீர் பாலத்தினுள் செல்லாது. பாலத்தின் இருபுறங்களிலும் விழுந்து வெளியேறி விடும்.இதற்கான பணிகள், பல்வேறு சுரங்கப்பாலங்களில் சில மாதங்களுக்கு முன் துவங்கியது. ஆனால், பணிகள் நிறைவு பெறாமல், இழுபறியாக உள்ளது.வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என, ரயில்வே நிர்வாகத்துக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி