உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கன்று பத்திரமாக மீட்பு

கன்று பத்திரமாக மீட்பு

பல்லடம்;பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, குப்பிச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 55; விவசாயி. விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான, பசுமாட்டின் கன்று ஒன்று, மேச்சலுக்கு விடப்பட்டிருந்த போது, இவரது தோட்டத்தில் உள்ள, 40 அடி ஆழ விவசாய கிணற்றுக்குள் தவறி விழுந்தது. தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடி வந்த கன்றை, முத்துசாமி மீட்க முயன்று தோல்வியடைந்தார். இதையடுத்து, திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.தீயணைப்பு படை வீரர்கள் கயிற்றின் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கி, கன்றினை உயிருடன் மீட்டனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி