உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கன்டெய்னர் லாரி மோதி பள்ளி சிறுவன் பலி

கன்டெய்னர் லாரி மோதி பள்ளி சிறுவன் பலி

திருப்பூர்;திருப்பூரில், கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தார்.திருப்பூர், செரங்காட்டை சேர்ந்தவர் சையது, 18; ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் அவிநாசி ரோடு, புஷ்பா சந்திப்பை நோக்கி டூவீலரில் சென்றார். அப்போது, டூவீலரின் பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.படுகாயமடைந்த சிறுவனை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேல் சிகிச்சைக்காக, திருப்பூர் அரசு மருத்துவமனை அழைத்து சென்ற நிலையில் பரிதாபமாக இறந்தார். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை