உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டம்

பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டம்

உடுமலை;பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு செய்து கூட்டம் நடத்துவது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.குழுவில் புதிய உறுப்பினர்கள் சேர்த்து பள்ளியின் செயல்பாடுகள், குழுவின் செயல்பாடுகள் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.அதன்படி, உடுமலை பாலப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. இக்குழுவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் வடிவேலு முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் கீதா, விஜயலட்சுமி கூட்டத்தை ஒருங்கிணைத்தனர். கூட்டத்தில் பெற்றோர், பள்ளி மேலாண்மைக்குழுவினர் 30 பேர்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை