உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி சீருடை தையல் கூலி உயர்வு: அரசு செவி சாய்க்க எதிர்பார்ப்பு!

பள்ளி சீருடை தையல் கூலி உயர்வு: அரசு செவி சாய்க்க எதிர்பார்ப்பு!

பல்லடம்:பல்லடம், படேல் வீதியில் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண் தையல் தொழிலாளர்கள், கூட்டுறவு சங்கம் மூலம் துணிகளை பெற்று, அரசு பள்ளிகளுக்கான சீருடைகளை கூலி அடிப்படையில் தைத்து வருகின்றனர். நீண்ட நாட்களாக இங்கு கூலி பிரச்னை நிலவி வரும் நிலையில், நேற்று முன்தினம் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் இதில் உடன்பாடு எட்டவில்லை. தையல் தொழிலாளர்கள் கூறியதாவது: ஏற்கனவே கூலி பிரச்னை நிலவி வரும் நிலையில், 'கேன்வாஸ்' வைத்து தைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'கேன்வாஸ்' ஒன்று, மூன்று ரூபாய் ஆகிறது. பீஸ் ஒன்றுக்கு, 7 -- 8 ரூபாய் வரை கிடைக்கும். 'கேன்வாஸ்' வைத்து தைப்பதால், 4.60 ரூபாய் மட்டுமே கிடைக்கும். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், இதெல்லாம் எங்களுக்கு தெரியாது. விருப்பம் இருப்பவர்கள் தைத்துக் கொடுங்கள் என்கின்றனர். கட்டுப்படியாகாத கூலியை கொடுத்து விட்டு, 10 பைசாவுக்கு கிடைக்கும் லேபிளை, 50 பைசா கொடுத்து வாங்குகின்றனர். கூலி உயர்த்தப்படாமல் எங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதிகாரிகள் எங்களின் கோரிக்கைகளை கேட்க கூட தயாராக இல்லை. எனவே, எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு தையல் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை