உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அறிவியல் விழிப்புணர்வு திறனறி தேர்வு; பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்

அறிவியல் விழிப்புணர்வு திறனறி தேர்வு; பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்

உடுமலை : பள்ளி மாணவர்களுக்கான,வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் அறிவியல் விழிப்புணர்வு திறனறித்தேர்வில், பங்கேற்க அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள், விபா அமைப்பு, என்.சி.இ.ஆர்.டி., இணைந்து, தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, ஆண்டுதோறும் வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் திறனறித்தேர்வு நடத்துகிறது.மாணவர்களின் ஆர்வத்தால், ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வு எழுவதில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டன. இதன் விளைவாக, தற்போது அனைத்து பள்ளி மாணவர்களும், அவர்களின் பள்ளியில் இருந்தே, இணைய வழியில் இத்தேர்வை எழுதுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.தேர்வு நடப்பாண்டு, அக்., 23 மற்றும் 27 உள்ளிட்ட இரண்டு நாட்களில், இணையவழியில் நடக்கிறது. மாணவர்கள் ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப், கம்ப்யூட்டர் என அனைத்தின் வாயிலாகவும், தேர்வில் பங்கேற்கலாம்.இத்தேர்வு திறந்த புத்தக தேர்வாக நடத்தப்படுகிறது. ஆங்கிலம் மட்டுமின்றி, தமிழ், மராத்தி, தெலுங்கு மொழிகளில் எழுதுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒரு பிரிவாகவும், ஒன்பது முதல் பிளஸ் 1 வரை ஒரு பிரிவாகவும் தேர்வு நடக்கிறது.பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் பாடபுத்தகத்திலிருந்து, 50 சதவீத வினாக்களும், அறிவியல் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு, சாந்தி சொரூப் பட்நாயக் அவர்களின் வாழ்க்கை வரலாறு, இந்தியாவின் சுதந்திர போராட்டம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட புத்தகங்களில் இருந்து 40 சதவீத வினாக்கள், சிந்தித்து விடையளித்தல் என்ற தலைப்பில், 10 சதவீத வினாக்களும் கேட்கப்படுகின்றன.தேர்வுக்கு விண்ணப்பிக்க www.vvm.org.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு, ஆண்டு தோறும் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.தேர்வு குறித்து கூடுதல் விபரங்களும், விண்ணப்பிக்கும் நடைமுறைகளை அறிந்து கொள்வதற்கும், வித்யார்த்தி விஞ்ஞான் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரானை 87782 01926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ