மேலும் செய்திகள்
விளைபொருட்கள் உற்பத்தி விதைகள் பங்கு முக்கியம்
25-Aug-2024
அவிநாசி;திருமுருகன்பூண்டியில், பாரதி மகாலிங்கம் சிற்பக் கலைக்கூடம் உள்ளது. இதில், மகாலட்சுமி நகரை சேர்ந்த நாகராஜ், 65, என்பவர் பணியாற்றி வந்தார். இந்த கூடத்தில் தயாரிக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை எடுத்து கொண்டு ஒரு சிறிய வேனில் சென்றார்.திருப்பூர் அருகே நாச்சிபாளையம் பிரிவு அருகே நடுரோட்டில் வேன் கவிழ்ந்தது. இதில் நாகராஜ் மற்றும் உடன் சென்ற ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, திருப்பூர் தலைமை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நாகராஜ் நேற்று உயிரிழந்தார்.நாகராஜ் உயிரிழந்ததற்கு அஜாக்கிரதையாகவும், போதிய பாதுகாப்பு இல்லாமல் சிலையை சிறிய வேனில் எடுத்துச் செல்ல கூறிய சிற்பக்கலை கூட உரிமையாளர் மகாலிங்கம் மீது, நாகராஜின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து, உரிய இழப்பீடு கேட்டு, ஆம்புலன்ஸில் நாகராஜ் சடலத்தை வைத்து, சிற்பக்கலைக்கூடம் முன், போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசினர். அதில், சமாதானம் ஏற்பட்டதால், சடலத்தை அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.
25-Aug-2024